தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாற்று மின்சாரத்தின் தேவையும் மாற்றம் காணும் ஐரோப்பாவும்

தமிழ் மீடியா

மேற்குலகின் வள்ளல் தன்மையும், அதன் பின்னாலான வளம் சுரண்டலும் எனும் போக்கினை, புலம் பெயர் சூழலில் அன்றாடம் நன்றாகவே பட்டுணர முடிகிறது. இந்தப் பட்டுணர்தல் இல்லாததினாற்தானோ பாமர மக்கள் முதல், படித்தவர்கள் வரை இவ்வாறான மேற்கின் வளம் சுரண்டும் வள்ளல்தனத்துக்குப் பலியாகிப் போகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும் அதனை அவ்விதம் சுலபமாகச் சொல்லி விலக்கிவிடமுடியாது. ஏனெனில் மேற்கின் போலித் தனத்தையும், வளங்களைக் கொள்ளையிடும் குணத்தினையும், வரலாற்றின் பல பக்கங்கள் சாட்சியமாய் எடுத்துரைக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அபாயத்தினை எண்ணி, அப்பகுதியில் வாழும் அன்றாடம் காச்சிகளான மக்கள் போராடிவருகின்றார்கள். ஆனால் நகர வாசிகள் சிலரும், நாட்டின் அரசியல்வாதிகள் பலரும், மாடு விழுந்த பக்கத்துக்கு குறி சுடும் கொள்கை மிகு ஊடகங்ககங்களும், இப் போராட்டத்தினை அறிவிலிகளின் போராட்டமாக, அச்சப்பட வேண்டிய அவசியமில்லாத விடயமாகவும், தமிழகத்தின் மின்தேவைக்கு அவசியமானது அணுமின்நிலையம் எனவும் சொல்லி வருகின்றார்கள். முழுக் கட்டுரை »

விசும்பின் துளி -06; நிலமும் பொழுதும் - பாமயன்

உலகின் எகிப்து, சுமேரியா, சீனா, சிந்துத் சமவெளி என்று பல்வேறு பண்டைய நாகரிகங்கள் உலகெங்கிலும் கண்டறியப்பட்டுள்ளன. மிக நெடிய வரலாற்றைக் கொண்ட பண்டைய எகிப்து நாகரிகம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. இவர்களது வாழ்க்கை பெரிதும் சடங்குகளையும் வழிபாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது. அதாவது இறப்பு, இறப்பிற்குப் பின்னும் வாழ்வு என்ற நம்பிக்கை இவர்களது வாழ்வியலைத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் பிரமிடுகள் எனப்படும் கூர்ங்கோட்டங்களை உருவாக்கினார்கள். இங்கு கடவுளுக்கும் 'ஃபாரோ' அரசனுக்கும் வேறுபாடு கிடையாது. கடவுளுக்குக் கொடுக்கும் மதிப்பு மன்னனுக்கும் உண்டு. தமிழில் கோயில் என்பதும் இறை என்பதும் மன்னனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் நெருக்கத்தை உணர்த்துவதை நாம் அறிவோம்.

மேலும் படிக்க...»
 

பாராளுமன்ற வேளாண் நிலைக்குழு அறிக்கை

நமது பாராளுமன்ற வேளாண் நிலைக்குழு 500 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மரபீனி மாற்று பயிர்கள் தேவை இல்லை என்பதை அழுத்தமாக கூறியதுடன் பல முற்போக்கான குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது, சீரிய ஆய்விற்குப்பின். பாசுதேப் ஆச்சார்யாவின் தலைமையில் 31 பேர் கொண்ட இந்த குழுவில் தமிழ்நாட்டிலிருந்து மூவர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட ஆவணங்களையும், நூற்றுகணக்கான பத்திரங்களையும் ஆராய்ந்து, 56 சாட்சிகளை விசாரித்து இந்த அறிக்கையை வெளி இட்டுள்ளனர்! அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய இந்த குழுவின் அறிக்கையில் திருத்தமோ அபிப்பிராய பேதமோ இல்லாமல் எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு அனைத்து சிபாரிசுகளையும் ஒப்புக்கொண்டுள்ளனர். மிகவும் பிரதானமாக முக்கியமாக கூறியிருக்கும் செய்தி: மரபீனி மாற்று பயிர்கள் இந்தியாவிற்கு தேவை இல்லை!

மேலும் படிக்க... »
 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org