வரகரிசி சுரை அடை
தேவையான பொருட்கள்
1.வரகரிசி - 2 1/2 கோப்பை
2.பாசி பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு (மூன்றும் சேர்த்து) - 1 கோப்பை
3.வரமிளகாய் - 12
4.சோம்பு 1 தேக்கரண்டி
5.துருவிய சுரைக்காய் - 1 (சுமார் 2 கோப்பை வரும்)
6.தேங்காய் துருவியது - 1/2 கோப்பை
7.பொடியாய் நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
8.தேவையான அளவு கருவேப்பிலை, கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
9.சீரகம் - 1 தேக்கரண்டி
10.மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
11உப்பு - அவரவர் சுவைக்கு ஏற்ப
செய்முறை
வரகரிசி, பருப்புகள், வரமிளகாய் மூன்றையும் ஒன்றாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்
நன்றாக ஊறியதும் மிளகாய்கள் மிதக்கும்
அதை மட்டும் எடுத்து, சோம்பு, தேங்காய்த் துருவலுடன் அரைக்கவும் (ஊற வைக்காவிடில் மிளகாய் நன்கு அரையாது)
இவை நன்றாக அரைந்ததும் வரகரிசியும், பருப்புகளையும் இட்டுச் சேர்த்து அரைக்கவும்
கரகரப்பான பதத்திற்கு மாவு வந்தவுடன் சுரைத் துருவலை அதில் இட்டு அரைக்கவும் (சுரைக்காய்த் துருவல் மைய அரைய வேண்டாம். சுமார் 5 முதல் 7 வினாடிகள் அரைந்தாலே போதுமானது)
இதில் வெங்காயம், கருவேப்பிலை,மஞ்சள் தூள், கொத்தமல்லி கலந்து தோசைக் கல்லில் அடை சுடவும்.
விருப்பம், வசதி, வழக்கத்திற்கு ஏற்றவாறு நெய், செக்கு நல்லெண்ணை போன்றவற்றைப் பயன் படுத்தவும். இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
மேலே கொடுத்துள்ள அளவு, படத்தில் உள்ளது போல் 15 அடைகளுக்குப் பொருந்தும்.