[பல வருடங்களுக்கு முன்னர் நாம் கெடு முன் கிராமம் சேர் என்ற கட்டுரைத் தொடரில் நகரத்தில் இருந்து கிராமம் பெயர்ந்து நிலத்துடனும், இயற்கையுடனும் வாழும் வாழ்முறையே சிறந்தது என்று எழுதியிருந்தோம். அவ்வாறு காணி நிலம் போதும் என்று வாழ்பவர்களைக் காணி நாயகர்கள் என்றும் சிறப்பாகக் கூறியிருந்தோம். மேலை நாடுகளில் 2% மக்களே வேளாண்மையில் ஈடுபடும் மையப் பொருளாதாரச் சூழலில் காலின் டட்ஜ், வெண்டல் பெர்ரி போன்ற மாற்றுச் சிந்தனையாளர்கள் இதே கருத்தை தத்தம் அனுபவத்தில் இருந்து கண்டறிந்து கிராம வாழ்வும், வேளாண்மை சார்ந்த வாழ்வுமே சமூக நலனிற்கு உகந்தது என்று தெளிவாய் எழுதியிருக்கின்றனர்.
எனினும் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் தான் ஏளனத்திற்கு உள்ளாய் விடுவோமோ என்ற அச்சத்தாலேயே, ஆட்டு மந்தை போல் பெரும்பாலான மக்கள் நகரம் சார்ந்த வாழ்வைத் தேடுகின்றனர். இவ்வறிவற்ற மந்தைப் போக்கில் ஆங்காங்கே சில தெளிந்த அறிவாளிகள், தற்சார்பு வாழ்முறையைத் தேடுவதும், தற்சார்பு வேளாண்மையான இயற்கை வழி வேளாண்மையைத் தொழிலாகக் கொள்ளும் துணிவுடையவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வாறு மந்தையை விட்டுத் தனியத் துணியும் நாயகர்களைக் கண்டறிந்து வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவது, தற்சார்பு வாழ்வியல் இதழான தாளாண்மையின் கடமை.
அவ்வரிசையில் இவ்விதழில் கணினித் தொழிலைத் துறந்து தன் பிறந்த மண்ணில் வேளாண்மையை விரும்பி ஏற்றுக்கொண்ட இளைஞரான சக்தி சிவகுமாரை அறிமுகப் படுத்துகிறோம் - ஆசிரியர்]
வெள்ளைச்சாமி எளிமையான உண்மையான வெட்கத்துடன் புன்னகைத்தார், உங்களை தாளாண்மை இதழுக்காக ஒரு நேர்காணல் செய்ய வந்தேன் என்று சொன்னதும். “நமக்கு என்னங்க தெரியும், நான் ஒரு சாதாரண, படிப்பறிவில்லாத குடியானவன். நம்மள பத்தி பத்திரிகை எளுதற அளவுக்கு ஒரு விசயமும் இல்லீங்க” என்றார்.
வெள்ளைச்சாமி கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆனைமலை கிராமத்தில் பல தலைமுறைகளாய் விவசாயம் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரும் அவர் சகோதரரும் ஒரே குடும்பமாய் வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாய் உழவில் உழன்றும் பொருளாராத ரீதியாக சிரமத்திலேயே அவர்கள் வாழ்க்கை நகர்ந்த வண்ணம் இருந்தது. தன் சந்ததியர் விவசாயத்தில் ஈடுபடுவதை இரு சகோதரர்களுமே சற்றும் விரும்பவில்லை. எல்லா கிராமத்துப் பெற்றோர்கள் போல, வெள்ளைச்சாமி தன் மகன் சக்தி சிவகுமார் கல்லூரியில் படிக்க வேண்டும், சென்னை பெங்களூரு போன்ற ஏதேனும் ஒரு பெரு நகரத்தில் “நல்ல” வேலையில் சேர்ந்து மேற்கத்திய பாணி உடையணிந்து, இரு சக்கர வாகனமொன்றில் அங்கும் இங்கும் பறக்க வேண்டும் என்றே, விருப்பப்பட்டார். சக்தி சிவகுமாரும் கல்லூரிப் படிப்பை முடித்து பெற்றோர் எண்ணப்படி ஒரு பெரு நகரத்தில் கணிப்பொறி சார்ந்த பணியாற்றத் தொடங்கினார். ஒரு திரைப்படக் கதை போல வீட்டின் பணச்சுமை குறைந்து சிறு வசதிகள் சேரத் துவங்கின.
தா: “உங்களூக்கு மொத்தம் எவ்வளவு நிலம் இருந்தது / இருக்கிறது?”
வெ: நம்மளதும் அண்ணனுதும் சேத்தி 9 ஏக்கர் தோப்பு, 21 ஏக்கர் வெறுங்காடு.
பொள்ளாச்சி வட்டாரத்தில், தோப்பு என்பது தென்னை; காடு என்பது பெரும்பாலும் மானாவாரி அல்லது வாய்க்கால் பாசன நிலம். நில மதிப்பில் தோப்பின் மதிப்பு நிலத்தை போல் இரு மடங்கு எனக் கொள்ளலாம். நான் அவரிடம், இவ்வளவு விவசாய நிலம் இருந்தும் உங்களுக்கு ஏன் பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தன எனக் கேட்டேன். அவரால் தக்க விடை தர முடியவில்லை. சக்தி சிவகுமார் உரையாடலில் இணைந்தார் சக்தி சிவகுமார், சில ஆண்டுகள் பெரு நகர வாழ்க்கை தனக்கு பல வினாக்களையும் தேடலையுமே கொடுத்ததாகக் கூறினார். அதில் ஒரு முக்கியமான வினா, ஏன் தம் பெற்றோரால் விவசாயத்தில் வெற்றிகரமாக பொருளீட்ட முடியவில்லை என்பது. தவிரவும், பெரியோர்கள் தொடர்ந்து உடல் நலக் குறைவுக்கு ஆளாகிறார்கள் எனும் கவலை. நகர வாழ்விலும் மனம் ஒட்டா நிலை. இவை யாவும் அவரை நிறைய படிக்கத் தூண்டியது. சக்தி ஒரு கட்டத்தில் வேலையையும், நகர வாழ்க்கையையும் உதறி விட்டு கிராமம் திரும்ப முடிவெடுத்தார்.
தா: வீட்டில் எ[பல வருடங்களுக்கு முன்னர் நாம் கெடு முன் கிராமம் சேர் என்ற கட்டுரைத் தொடரில் நகரத்தில் இருந்து கிராமம் பெயர்ந்து நிலத்துடனும், இயற்கையுடனும் வாழும் வாழ்முறையே சிறந்தது என்று எழுதியிருந்தோம். அவ்வாறு காணி நிலம் போதும் என்று வாழ்பவர்களைக் காணி நாயகர்கள் என்றும் சிறப்பாகக் கூறியிருந்தோம். மேலை நாடுகளில் 2% மக்களே வேளாண்மையில் ஈடுபடும் மையப் பொருளாதாரச் சூழலில் காலின் டட்ஜ், வெண்டல் பெர்ரி போன்ற மாற்றுச் சிந்தனையாளர்கள் இதே கருத்தை தத்தம் அனுபவத்தில் இருந்து கண்டறிந்து கிராம வாழ்வும், வேளாண்மை சார்ந்த வாழ்வுமே சமூக நலனிற்கு உகந்தது என்று தெளிவாய் எழுதியிருக்கின்றனர்.
தெளிந்த அறிவாளிகள், தற்சார்பு வாழ்முறையைத் தேடுவதும், தற்சார்பு வேளாண்மையான இயற்கை வழி வேளாண்மையைத் தொழிலாகக் கொள்ளும் துணிவுடையவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வாறு மந்தையை விட்டுத் தனியத் துணியும் நாயகர்களைக் கண்டறிந்து வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவது, தற்சார்பு வாழ்வியல் இதழான தாளாண்மையின் கடமைss.
அவ்வரிசையில் இவ்விதழில் கணினித் தொழிலைத் துறந்து தன் பிறந்த மண்ணில் வேளாண்மையை விரும்பி ஏற்றுக்கொண்ட இளைஞரான சக்தி சிவகுமாரை அறிமுகப் படுத்துகிறோம் - ஆசிரியர்]
குடியானவன். நம்மள பத்தி பத்திரிகை எளுதற அளவுக்கு ஒரு விசயமும் இல்லீங்க” என்றார்.
வெள்ளைச்சாமி கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆனைமலை கிராமத்தில் பல தலைமுறைகளாய் விவசாயம் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரும் அவர் சகோதரரும் ஒரே குடும்பமாய் வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாய் உழவில் உழன்றும் பொருளாராத ரீதியாக சிரமத்திலேயே அவர்கள் வாழ்க்கை நகர்ந்த வண்ணம் இருந்தது. தன் சந்ததியர் விவசாயத்தில் ஈடுபடுவதை இரு சகோதரர்களுமே சற்றும் விரும்பவில்லை. எல்லா கிராமத்துப் பெற்றோர்கள் போல, வெள்ளைச்சாமி தன் மகன் சக்தி சிவகுமார் கல்லூரியில் படிக்க வேண்டும், சென்னை பெங்களூரு போன்ற ஏதேனும் ஒரு பெரு நகரத்தில் “நல்ல” வேலையில் சேர்ந்து மேற்கத்திய பாணி உடையணிந்து, இரு சக்கர வாகனமொன்றில் அங்கும் இங்கும் பறக்க வேண்டும் என்றே, விருப்பப்பட்டார். சக்தி சிவகுமாரும் கல்லூரிப் படிப்பை முடித்து பெற்றோர் எண்ணப்படி ஒரு பெரு நகரத்தில் கணிப்பொறி சார்ந்த பணியாற்றத் தொடங்கினார். ஒரு திரைப்படக் கதை போல வீட்டின் பணச்சுமை குறைந்து சிறு வசதிகள் சேரத் துவங்கின.
தா: “உங்களூக்கு மொத்தம் எவ்வளவு நிலம் இருந்தது / இருக்கிறது?”
வெ: நம்மளதும் அண்ணனுதும் சேத்தி 9 ஏக்கர் தோப்பு, 21 ஏக்கர் வெறுங்காடு.
பொள்ளாச்சி வட்டாரத்தில், தோப்பு என்பது தென்னை; காடு என்பது பெரும்பாலும் மானாவாரி அல்லது வாய்க்கால் பாசன நிலம். நில மதிப்பில் தோப்பின் மதிப்பு நிலத்தை போல் இரு மடங்கு எனக் கொள்ளலாம். நான் அவரிடம், இவ்வளவு விவசாய நிலம் இருந்தும் உங்களுக்கு ஏன் பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தன எனக் கேட்டேன். அவரால் தக்க விடை தர முடியவில்லை. சக்தி சிவகுமார் உரையாடலில் இணைந்தார்
சக்தி சிவகுமார், சில ஆண்டுகள் பெரு நகர வாழ்க்கை தனக்கு பல வினாக்களையும் தேடலையுமே கொடுத்ததாகக் கூறினார். அதில் ஒரு முக்கியமான வினா, ஏன் தம் பெற்றோரால் விவசாயத்தில் வெற்றிகரமாக பொருளீட்ட முடியவில்லை என்பது. தவிரவும், பெரியோர்கள் தொடர்ந்து உடல் நலக் குறைவுக்கு ஆளாகிறார்கள் எனும் கவலை. நகர வாழ்விலும் மனம் ஒட்டா நிலை. இவை யாவும் அவரை நிறைய படிக்கத் தூண்டியது. சக்தி ஒரு கட்டத்தில் வேலையையும், நகர வாழ்க்கையையும் உதறி விட்டு கிராமம் திரும்ப முடிவெடுத்தார்.
தா: வீட்டில் எதிர்ப்பு இருந்ததா?
சக்தி சிரிக்கிறார். “கடும் எதிர்ப்பு. கண்டிப்பாக இருக்குமல்லவா?
என்னைப் பொறுத்தமட்டில் பணம் நமது சிக்கல்களூக்கு முழுமையான தீர்வு இல்லையென உணர்ந்தேன். வாழ்க்கைக்கு துணை நிற்கும் அளவுக்கு பணம் தேவையே தவிர பணமே வாழ்வாகக் கூடாது. நான் நிறையப் படித்தேன். சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடையேதும் இல்லை.
ஏன் நாம் நல்ல முறையில் விவசாயம் செய்து அதிலும் பொருள் ரீதியாய் வெற்றி பெற முடியாது? நாளடைவில் எல்லோரும் நகரங்களுக்கு குடி பெயர்ந்தால், உணவு எப்படி உற்பத்தியாகும்? பெற்றோர்கள் முதுமையில் துணை, ஆதரவை நாடும் நிலையில் நாம் அவர்களை விட்டு வேறு எங்கோ வசிப்பது சரியா?
இப்படி பல குழப்பங்களுக்கு வழி நாமாய்த் தேடினால் தான் தீர்வு கிடைக்கும் என்று முடிவு செய்தேன். அதன் முதல் படி தான் கிராமத்துக்கு திரும்பும் முடிவு இங்கு வந்தவுடன் நான் செய்த முதற் செயல் என் தந்தை, பெரியப்பா ஆகியோரிடமிருந்து பண்ணையின் நிர்வாகப் பொறுப்பை எடுத்துக் கொண்டது தான்.”
அவர் இயற்கை முறை விவசாயத்திற்கு நம் பண்ணையை மாற்ற வேண்டும் என்றவுடன் வீட்டார் மிக்க தயக்கத்துடனே ஒப்புதல் தந்துள்ளனர். அதன் பின் சக்தி நிறைய செயல் முறை மாற்றங்களைச் செய்திருக்கிறார்.
1. முதலில், தென்னந்தோப்பில், மரங்களூக்கிடையே ஒன்றரை அடி அகலம், மூன்றடி ஆழத்துக்கு சிறு அகழிகளை வெட்டி அக்குழிகளில் தேங்காய் நார் மஞ்சி இட்டு நிறைத்து விட்டார். 2. தென்னை மர வேருக்கு மிக அருகில் அமைந்திருந்த சொட்டு நீர் குழாய்களை அகற்றி விட்டார் 3. வழக்கமாய் இடும் வேதி இடுபொருட்களான ஜிப்சம், யூரியா போன்றவைகள அறவே நிறுத்தி விட்டார். 4. இந்த வட்டாரத்தில் தென்னை விவசாயிகள், வழக்கமாய்ச் செய்யும், களை எடுத்தல், மரத்தைச் சுற்றி வேரை ஒட்டி பாத்தி அமைத்தல், தோப்பிற்குள் உழவு ஓட்டுதல் போன்ற பராமரிப்பு செலவுகளை தவிர்த்து விட்டார்.
வெள்ளைச் சாமி இடையிட்டார். “மொத வருசம் காப்பே இல்லீங்க. எங்களுக்கெல்லாம் ரொம்ப வெசனமாப் போச்சு. இவரு படிச்சவரு, எதுத்தும் ஏதும் சொல்ல முடியாது. ஆனாலும் இவர் யோசனைப் படி மரவள்ளி போட்டோம் பாருங்க, அது எங்கள காப்பாத்திருச்சு”
சக்தி தொடர்ந்தார். “சில பால பாடங்கள் நம்ம உழவர்களுக்கு நாம கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டோம். இவர்கள் வருமானம் கணக்கிடும் விதமே தவறானது. தங்கள் உழைப்பு, உரம்,விதை,பராமரிப்பு, அறுவடை போன்ற செலவுக் கணக்குகளை இவர்கள் மறந்து, விளை பொருள் விலை முழுதுமே வருமானம் என்று எண்ணி விடுகிறார்கள். அய்யா சொன்னது போல முதல் வருடம் தென்னையின் காய்ப்பு குறைந்த்ததென்னவோ உண்மை தான். ஆனால், நாங்கள் வழக்கமாக பராமரிப்புக்கு செய்யும் செலவு முழுதுமாய் மிச்சப் படுத்தி விட்டோம். கையில் இருக்கும் பணம் வரவுக்கு சமமில்லையா? வருவாய் என்பது விளைச்சலை விற்று வரும் பணம் என்றே பெரும்பாலான உழவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையான வருவாய் என்பது நிகர லாபமே; வேளாண் விளைச்சலை விற்றதில் செலவினங்களைக் கழித்து எஞ்சுவதே வருவாய்”
தா: இந்த மாற்றங்கள் செய்தது எந்த ஆண்டில்?
சக்தி: 2010 இறுதியில் திட்டமிட்டு 2011 பருவ மழை வருமுன், மாற்றங்களின் முதல் செயலாக்கம் நடந்தது. எங்கள் மரவள்ளி விளைச்சல், எங்களுக்கு சில புதிய ஆச்சரியமான உண்மைகளை உணர்த்தியது. 2012 ஆம் ஆண்டு எங்கள் வட்டாரத்தில் தென்மேற்கு பருவ மழையின் அளவு மிகக் குறைவு. நிறைய தோப்புகளில் தென்னை மரங்கள் பட்டு போகும் அளவுக்கு வறட்சி. எனினும் எங்கள் தோட்டத்தில் எல்லா மரங்களும் நல்ல நிலையில் தான் இருந்தன. அந்த வறட்சி எனக்கு இன்னொரு புரிதலையும் தந்தது. தாவரங்கள் நம்மை விட நுட்பமான அறிவுள்ளவை என்பதை உணர்ந்தேன். மாறும் சூழலை அவை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்றாற் போல் தம் வளர்முறை மற்றும் இனப்பெருக்கப் பணியை அமைத்துக் கொள்ளூம் திறன் உள்ளவை. இந்த அறிவை நான் எத்தனை புத்தகங்கள் படித்தாலும் பெற்றிருக்க முடியாது. அனுபவப் பாடமே உண்மையான ஆசான்.
சக்தி கிராமத்திற்கு திரும்பியதும், தோட்டத்தில் மட்டுமல்லாது, வீட்டிலும் சில வாழ்வுமுறை மாற்றங்களை அறிமுகப் படுத்தினார். ஆங்கில மருத்துவத்தையே பல காலமாகப் பின் பற்றி வந்த குடும்பத்தாரிடம், மாற்று மருத்துவ ஆலோசனைகளை கூறத் தொடங்கினார். அவர் தந்தை வெள்ளைச்சாமியின் அனுமானப்படி, வீட்டிற்கான மருத்துவ செலவு, வருடம் சுமார் ஒரு இலட்சமாக இருந்தது. இப்பொழுது இயற்கை வாழ்வு, நச்சில்லா (வீட்டிலேயே விளையும்) காய்கறி, தானியம், உணவு மற்றும் இயற்கை மருத்துவ மாற்றங்களால், பத்தாயிரத்துக்கும் குறைவாக உள்ளது. சக்தி, உணவே மருந்து என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளார். தாளாண்மை இதழுக்காக அவருடன் உரையாடச் சென்ற போது, அவர் ஒரு காயத்தின் காரணமாக நடக்க அல்லல் பட்டுக் கொண்டிருந்தார். (தோட்டத்தில் அதிகாலை நடக்கையில், ஒரு குழாய் பாதத்தை கிழித்து விட்டதாம்). அதற்கும் வேப்பிலை, மஞ்சள் கொண்டு அவரே தயார் செய்த கலவையே போடுவதாகக் கூறினார்.
அவர்கள் இப்போது, தென்னை தவிர, காய்கறிகள், சிறு தானியங்கள் மற்றும் நிலக்கடலை பயிரிடுகிறார்கள். கடலை, தேங்காய் அருகில் உள்ள ஒரு இயற்கை எண்ணெய் தயாரிக்கும் சிறு ஆலைக்கு விற்பனை செய்கிறார்கள். காய், தானியங்கள் கோவையில் உள்ள சில இயற்கை அங்காடிகளுக்கு அனுப்பப் படுகிறது.
வெள்ளைச்சாமி குடும்பத்துடன் உரையாடுவதே ஒரு இனிய அனுபவமாய் இருந்தது. சக்தி இதைப் பற்றி எழுதும் போது, தயவு செய்து, தனி நபருக்கு முக்கியத்துவம் தரும்படி வடிவமைக்க் வேண்டாம் என்று உறுதியாகக் கேட்டுக் கொண்டார். அவர் கண்ணோட்டத்தில், இது ஒவ்வொருவரும் கட்டாயம் சுய சிந்தனையில் முடிவெடுத்து வாழ வேண்டிய வழி. ஒரு குடும்பம் முழுதும் இதைப் புரிந்து கொண்டு, முழுதுமாய் ஒப்புக் கொள்ளாவிடில் இது சாத்தியம் இல்லை என்பதை இந்த நேர்காணல் தெளிவாக்க வேண்டும் என்றும் வலியுறித்தினார்.