முன்னுரை: நம் இந்திய மரபுச் சிந்தனைகளில் உடல் என்பது போற்றுதலுக்கு உரியதாகவும், தூற்றுதலுக்கு உரியதாகவும் வெவ்வேறு கட்டங்களில் பார்க்கப் பட்டுள்ளது. “புன்புலால் நரம்பு என்புடைப் பொய்யுடல், அன்பர் யார்க்கும் அருவருப்பு ” என்று தாயுமானவராலும், “சீவார்ந்து, ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்” என்று மாணிக்கவாசகராலும், “வாய்நாறும் மூழல், மயிர்ச்சிக்கு நாறும்” என்று பட்டினத்தாராலும் வசைபாடப் பட்ட அதே உடல், “ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி” என்று ஔவையாராலும், “உள்ளம் பெரும் கோயில், ஊனுடம்பு ஆலயம்; தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்” என்று திருமூலராலும் பாராட்டுப் பெற்றுள்ளது. ராஜயோகம் என்று சொல்லப்படும் உடல் வழி ஆன்மப் பயிற்சிகள் உடற் தூய்மைக்கும், மூச்சுப் பயிற்சிகளால் மனத் தூய்மைக்கும் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஞான யோகமும், பக்தி யோகமும் உடலை அலட்சியப்படுத்தி சிந்தனைக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன.
சிறுதானிய மசாலா கஞ்சி
சிறு தானியங்களை ஒன்றாகச் சேர்த்து, அதில் தண்ணீர் விட்டு வேகவைக்கவும் அல்லது காய்ச்சவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, உப்பு போட்டு நன்கு வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் வேகவைத்த சிறுதானிய கலவையை இதில் சேர்க்கவும். எளிதாக,சிறுதானிய மசாலா கஞ்சி தயார்!
அடிசில் பார்வை - அனந்து
தேயிலையும் சாயாவும் - அனந்து
