தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

தையல் சிட்டு:

குழந்தைகள் மழலைப் பருவத்தில் ஓரிடத்தில் நிற்க மாட்டார்கள். சதா ஓட்டம்தான் அவர்களின் வேலை. அதே போல், இந்த மாதம் நாம் காணும் பறவையான தையல் சிட்டும் மரத்தில் ஓர் இடத்தில் நில்லாது அங்கும், இங்கும் தாவிக்கொண்டே நடக்கும் (பறப்பது அல்ல). இதற்கு தையல் சிட்டு, பொன்சிட்டு என்ற பெயர்களும், ஆங்கிலத்தில் Common Tailorbird என்ற பெயரும் அறிவியலில் Orthotomus sutorius என்ற பெயரும் உண்டு.

தோற்றம்:

அளவு: 10 முதல் 14 செ.மீ. எடை: 6 முதல் 10 கிராம்! பாசிப் பச்சை நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். தலைக்கு மேல் அரக்கு நிறமும், வால் பெரும்பாலான நேரம் தூக்கியே இருக்கும் தன்மையும் கொண்டது. வாலில் இறகுகள் கூர்மையாக அமைந்திருக்கும்.

மேலும் படிக்க...»

உளவுத் துறையும் தன்னார்வ நிறுவனங்களும்

இந்திய அரசின் உளவு நிறுவனம், குறிப்பிட்ட சில தன்னார்வ நிறுவனங்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரித்துக் கசியவிட்டுள்ளது. உண்மையில் இது ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டுள்ள அறிக்கை என்பது நன்றாகத் தெரிய வருகிறது. பொதுவாக தொண்டு நிறுவனங்கள் அல்லது தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொண்டு அதற்கு பதிலியாக நம் நாட்டில் உள்ள தகவல்களை அவர்களுக்கு அதாவது பணம் தருபவர்களுக்கு அளிக்கின்றார்கள் என்ற பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இதில் உண்மையும் உண்டு. அவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்பவர்களும், தெரியாமல் இதை ஒரு தொழிலாகச் செய்பவர்களும் உண்டு. எவ்வாறாயினும் இவர்கள் இந்தியாவைப் பற்றிய தகவல்களைத் தருபவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த அறிக்கை அப்படிப்பட்ட நிறுவனங்களைப் பற்றியதா? என்று கவனித்தால் இல்லை. இவர்கள் குறி வைப்பது 'தொண்டு' நிறுவனங்களை அல்ல. சமூகச் செயல்பாட்டாளர்கள் (social activists) அல்லது சமூகப் போராளிகள் என்று அறியப்படுபவர்கள் மீது என்பதுதான் இங்கு நோக்கத் தக்கது.

மேலும் படிக்க...»

 

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org