தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

தையல் சிட்டு

குழந்தைகள் மழலைப் பருவத்தில் ஓரிடத்தில் நிற்க மாட்டார்கள். சதா ஓட்டம்தான் அவர்களின் வேலை. அதே போல், இந்த மாதம் நாம் காணும் பறவையான தையல் சிட்டும் மரத்தில் ஓர் இடத்தில் நில்லாது அங்கும், இங்கும் தாவிக்கொண்டே நடக்கும் (பறப்பது அல்ல). இதற்கு தையல் சிட்டு, பொன்சிட்டு என்ற பெயர்களும், ஆங்கிலத்தில் Common Tailorbird என்ற பெயரும் அறிவியலில் Orthotomus sutorius என்ற பெயரும் உண்டு.

தோற்றம்:

அளவு: 10 முதல் 14 செ.மீ. எடை: 6 முதல் 10 கிராம்! பாசிப் பச்சை நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். தலைக்கு மேல் அரக்கு நிறமும், வால் பெரும்பாலான நேரம் தூக்கியே இருக்கும் தன்மையும் கொண்டது. வாலில் இறகுகள் கூர்மையாக அமைந்திருக்கும்

காணும் இடம்

ஆசியக் கண்டத்தில் அதிகமாகக் காணலாம். நாம் வசிக்கும் இடத்தில் இவை மாமரங்களிலும், மருதாணி, கொய்யா மற்றும் பாதாம் மரங்களிலும் அதிகம் இருக்கும். டிக், டிக், டிக் என்ற இதன் குரலை வைத்து இதனை இனங்கண்டு கொள்ளலாம். பாடும் குரல் சீப்,சீப் என்று நீண்ட ஒலியாக இருக்கும்.

உணவு

பூச்சிகள், அதன் முட்டைகள், மற்றும் மரங்களின் பூக்களில் உள்ள தேன் ஆகியவற்றை உண்ணும்

இனப்பெருக்கம்

கூட்டைக் கட்டுவதில் இவை மிகத் திறமைசாலிகள். அகன்ற இலை வளைத்துக் கூடாரம் போல் ஆக்கி, முனைகளைத் தைத்து விடும். இலை நுனிக்களை சிலந்திவலை மற்றும் தாவர‌ நார்களைக் கொண்டு மிக அழகாகப் பின்னி இருக்கும். 3 முதல் 4 முட்டைகள் இடும். பெண் பறவைதான் அடை காக்கும்.

சிறப்புச் செய்திகள்

  • Orthotomus sutorius என்றால் லத்தீன் மொழியில் நேராகத் தைக்கும் செருப்புத் தொழிலாளி என்று பொருள்.
  • ருட்யார்ட் கிப்ளிங்கின் Jungle Book நூலில் இதற்கொரு சிறப்புக் கதாபாத்திரம் உண்டு
  • மாமரங்களில் இவை அதிகம் தென்பட்டால் அவ்வருடம் காய்கள் அதிகமாகக் காணப்படலாம்
  • அயல் மகரந்தச் சேர்க்கைக்குப் பெரிதும் உதவுவதாலும், பூச்சிகளை அழிப்பதாலும் இவை உழவனின் உற்ற தோழன்.
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org