தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குணமெலாம் இழந்த பிணங்களாம் அவரே! - அர. செல்வமணி


மக்களே போன்ற மாக்களின் மன்றம்

காசே குறியெனும் கசடரின் கூட்டம்

குறிதனில் தவறாக் கூற்றுவர் அவரே

இனத்தையே அழிக்கும் ஈனப் பிறவிகள்

பழங்குடி மக்கள் பழங்கண் அடைய (பழங்கண் = துன்பம்)

அவர்வாழ் வழித்தே அவர்கான் கவர்ந்தார்

அடவிகள் பலவும் அடியோ டொழித்தார் (அடவி = காடு)

மலைகளைச் சாய்த்தார் தலைகீழ் ஆக்கினார்

ஆழ்துளைப் பொறிகளால் பாழ்வெளி மிகுத்தார்

சுரங்கந் தோண்டியே உறிஞ்சுவர் வளமெலாம்

பழனம் பலவும் பாழ்படச் செய்தே (பழனம் = மருத நிலம்)

ஆலைகள் மண்டிடச் சாலைகள் அமைத்தார்

ஊழெலாம் குலைத்துச் சூழலைச் சிதைத்தே (ஊழ் = முயற்சி)

ஒருசிலர் ஆள உருகிடும் உலகம்

ஏற்றமும் தாழ்வுமாய்ச் செற்றமும் இழந்தே (செற்றம் = மனத் திடம்)

தலைவிதி இதுவென நலிந்திடும் அவலம்

பசித்தால் மட்டுமே புசிக்கும் மாக்கள்

மனிதரில் சிலர்க்கோ கனவிலும் பசியே

பெரும்பசி கொண்டே பெருக்குவர் பணத்தை

புசிப்பு மிகுந்தே பொசுக்குவர் உலகை (புசிப்பு = நுகர்வு)

ஈட்டும் பணந்தான் ஊட்டமே என்னும்

குணமெலாம் இழந்த பிணங்களாம் அவரே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org