தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

இந்த இதழில் நாம் அறிந்து கொள்ளும் பறவை, நம்ம தூக்கணாங்குருவி. அட! இதில் என்ன புதுமை. நம் அனைத்து கிராமங்களிலும் இதை காணலாம் என்று சிலர் எண்ணுவர். தெரிந்த பறவையைப் பற்றிய சில தெரியாத செய்திகளை இந்த இதழில் காண்போம்

காணுமிடம்

அதிகமாக, நெல் விளையும் இடங்களில், முள்காடுகளில் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் மிக உயரமான மரத்தில் கூடி கட்டி வசிக்கும்.

தோற்றம்

தூக்கணாங்குருவி (Baya Weaver - Ploceus philippinus Linn) இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் எளிதில் காணக்கூடியது. பார்ப்பதற்குச் சிட்டுக்குருவி (15 cm) போல் இருக்கும். ஆண்களுக்குத் தலை மஞ்சள் நிற‌த்தில் இருக்கும் (இனப்பெருக்க காலத்தில் நிற‌ம் அதிகமாகப் பார்க்கலாம்) பெண்களுக்கு இவ்வேறுபாடு கிடையாது.

முழுக் கட்டுரை »

செவிக்கு உணவு இல்லாத போது

கேழ்வரகு வெல்ல அடை - ஸ்ரீ

கேப்பை என்றும், ராகி என்றும், Red Millet என்றும் பெயர் பெற்ற கேழ்வரகு மிகுந்த கால்சியம் சத்தை உள்ளடக்கியது. உடல் கொழுப்பைக் கூட்டாமல் ஊட்டச்சத்தை மட்டும் கூட்ட வல்லது. இந்தக் கேழ்வரகில் இனிப்பு அடை செய்வது எப்படி என்று இந்த மாதம் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 1 கோப்பை

வெல்லம் (துருவியது) - 1/2 கோப்பை

மேலும் படிக்க...»

 

இயக்கச் செய்திகள் - உழவன் பாலா

2013 ஜூன் மாதம் 29 தேதி, திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டத்தில் ஒரு விவசாயக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 3000 பேர் உறுப்பினராக உள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் போருர் கிளையின் மூன்றாம் ஆண்டு விழா அது.கூட்டத்திற்குச் சுமார் 50 விவசாயிகள் வந்திருந்தனர்; அதில் நிறைய இளைஞர்கள் இருந்தது மகிழ்ச்சி தருவதாய் இருந்தது. கொடியேற்றுதல், தீர்மானங்கள் போன்றவற்றிற்குப் பின் கூட்டம் துவங்கியது. தற்சார்பு இயக்கத்தின் நண்பரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான திரு. ப.தி. இராசேந்திரன் அவர்கள் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். எனக்கு முன்னர் பேசிய பலரும் விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளையும், உழவு என்பது எப்படி ஒரு நசியும் தொழிலாகி விட்டது என்றும் ஆவேசமாகவும், பல ஆணித்தரமான ஆதாரங்களுடனும் பேசினர். அவர்கள் அச்சடித்த கூட்ட நோட்டீசில், அரசாங்கம் நெல் கொள்முதல் விலையை கிலோ ரூ.20 ஆகவும், கரும்பு கொள்முதல் விலையை கிலோ ரூ. 4 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org