தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

பாம்பின் வாய்ப் பாடம்

2001ல் குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய பூகம்பம் தாக்கிப் பல்லாயிரக் கணக்கானோர் இறந்தனர். 2004ல் சுனாமி தாக்கிக் கிழக்குக் கடற்கரையில் சொல்லொணாச் சேதம் ஏற்பட்டது. வருடா வருடம் இயற்கையின் சீற்றம் அதிகமாகிக் கொண்டே போகிறது. 2011ல் ஃபுகுசிமாவில் ஏற்பட்ட நில நடுக்கமும் அதனால் ஏற்பட்ட அணு உலை விபத்தும் உலகையே உலுக்கி எடுத்து விட்டன. எண்ணற்றோர் இறந்தது மட்டுமன்றி இருப்போர் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது 2000 பேர் தைராய்ட் புற்றுநோயால் பாதிக்கப் படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இதன் நாட்பட்ட தாக்கம் எப்படி இருக்கும் என்றே அளவிட முடியாத நிலையில் இருக்கிறோம். ஃபுகுசிமாவிலன் கதிர்வீச்சின் தாக்கம் நாங்கள் அளவிட்டதைப் போல் 11 மடங்கு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
முழுக் கட்டுரை »

உணவும் உரிமையும் - சரா

கடந்த இரு கட்டுரைகளில், உலகிலேயே மக்கள் உரிமைகள் மிக அதிகமாக இருப்பதாகக் கருதப்படும் அமெரிக்க நாட்டில் எப்படி அடிப்படை உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாமல் மிகச் சில பெரும் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தில் 30 கோடி மக்களின் உணவு ஒரு வியாபாரம் ஆகி விட்டது என்று கண்டோம். எப்படி அரசும் அதன் சட்டங்களும் இந்நிறுவனங்களின் கைப்பாவைகளாக இருக்கின்றன என்பதையும் கண்டோம். இதன் வரலாற்றைச் சற்றுப் பின்னோக்குவோம். ஏறத்தாழ 30-35 வருடங்களுக்கு முன் 'பொது மக்கள் அன்றாடம் உண்ணும் உணவு என்பது ஒரு மிகப் பெரும் சந்தை; இதை ஆளுமை கொள்ள என்ன செய்ய வேண்டும்' என்று சில நிறுவனங்கள் கேள்வி எழுப்பின. அவற்றில், “உணவை உழவன் உற்பத்தி செய்கிறான்” என்று மக்களின் மத்தியில் நிலவும் நம்பிக்கையைத் தங்கள் வியாபாரத்திற்கு ஒரு தடையாக அவர்கள் கண்டு பிடித்தனர். ஆமாம், உங்கள் உணவு விவசாயியிடம் இருந்து வருகின்றது என்று நீங்கள் நம்பினால், பின்னர் ஏன் நீங்கள் அதற்கான பெரும்பாலான பணத்தை ஒரு கம்பனியிடம் கொடுப்பீர்கள்? மேலும் படிக்க...»

 

தற்சார்பு வாழ்வியல் - சாட்சி

பொன் செய்யும் மருந்து

தற்சார்பு வாழ்வியலின் பல அங்கங்களைப் பற்றி நாம் இயன்றவரை ஆராய்ந்து வருகிறோம். அதனால் சமூகத்திற்கு ஏற்படக் கூடிய நன்மைகளைப் பார்த்தோம். சமூகத்தினால் தனக்கு எதுவும் தேவைப்படாத தனிமனிதர்கள், சமூக வாழ்வில் இருப்பதே ஒரு தியாகமும், சேவையும்தான் என்றும் பார்த்தோம். தற்சார்பு வாழ்வியலுக்குத் தேவையான மனநிலை எது என்று இக்கட்டுரையில் ஆராய்வோம். நான் சுமார் 25 வயது இளைஞ‌னாய் இருக்கும்போது என் நண்பனின் தந்தை “வாழ்வில் உன் குறிக்கோள் என்ன?” என்று கேட்டார். நான் அதிகம் யோசிக்கத் தேவையின்றி “சும்மா இருப்பதுதான் என் வாழ்வின் லட்சியம்” என்று உடனே கூறினேன். அதை அவர் பெரியதொரு நகைச்சுவையாக ரசித்தார். பின் வெகு நேரம் எனக்கு உலக வாழ்வைப் பற்றியும், பணம் எவ்வாறு வாழ்வில் முக்கியம் என்றும், வெற்றிதான் லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் போதித்தார். 22 வயதிலேயே தோரோவைப் படித்துக் கெட்டு விட்ட எனக்கு அந்தப் போதனை அதிகம் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org