தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் பார்வை - 1 - அனந்து

நாம் அனைவ‌ரும் எப்படி விவசாயி மற்றும் விவசாயத்திடமிருந்து விலகியும், அந்நியப்பட்டும் இருக்கிறோமோ உணவிலிருந்தும் அப்படியே இருக்கிறோம். உணவு என்பது விவசாயியின் கையிலிருந்து எப்பொழுதோ வியாபாரியின் கைக்கு மாறிவிட்டது ஒரு வேதனையான உண்மை. உற்பத்தியாளரின் கையிலிருந்து பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் என்று இடைத் தரகர்கள் அல்லது நிறுவனங்களின் கையில் சிக்கி விட்டது உணவு. சந்தை எப்படி உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரிடமிருந்து வெகுதூரம் சென்றது என்று சில இதழ்களுக்கு முன் பார்த்தோம். அதே போல் உணவும் உற்பத்தியாளரிடமிருந்தும் நுகர்வோரிடமிருந்தும் மிகத் தொலைவில் உள்ளது. இன்று, உணவு என்பது வணிகப்பொருளாக (commodity) மட்டுமே விளங்குகிறது. வணிகம்- அதுவும் மேற்கத்திய வழியில் வந்தால்- லாபத்திற்காக எதுவும் செய்யலாம் என்கிற போர்வையில், நியாயம், நன்னெறி எல்லாம் தூக்கி எறியப்பட்டு விடும். அதிலும் பெரும் (மற்றும் பன்னாட்டு) நிறுவனங்கள் வந்தால், வக்கிர லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் என்பதைப் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம்.
முழுக் கட்டுரை »

மருந்து வாங்கப் போறீங்களா? - அறிமுகம்

இதனை எழுதிய திரு. இ.க. இளம்பாரதி, முதுநிலை மருந்தியலை, மருந்துண்ணறிவியல் துறையில் பயின்றுள்ளார் (Master of pharmacy in pharmacology). இப்பொழுது பெங்களூரில் ஒரு தனியார் மருந்து நிறுவனத்தில் மனித வழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் மருந்துகளின் நதிமூலம், மருந்துகளில் கலப்படம், போலிகள் உருவானது, உலகில் பல இடங்களிலும் நடந்த துயர்படுத்தும் பக்க விளைவுகள், பல்வேறு ஆய்வுகள், மருந்துகளின் எதிர் மறை விளைவுகள், உலகில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் எப்படி உலவுகின்றன என்று பல விஷயங்களையும் ஆழமாக ஆய்ந்து புத்தகமாக வெளி இட்டுள்ளார்
மேலும் படிக்க...»

 

புதிய புலவர்கள் - பாபுஜி

புகை வளையங்கள் - ஜார்ஜ் மொன்பியோட்

பணத்திற்காக அரசர்களைப் பாடும் புலவர்கள் நவீன காலங்களில் அறிவியலாளார் வேடம் இட்டு, பெரும் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஆய்வுகளையும், கருத்துக்களையும் கூறுவதாக எழுதியிருந்தோம். அறிவியல் விரும்பிகள் பலரும் நம்மை எதிர்த்தனர். எனினும் தயங்காது, இதோ நம் புதிய புலவர் 01 - டேவிட் வார்புர்டன் ! ] சில வாரங்களுக்கு முன்பு நான் வேறு எதையோ தேடிக்கொண்டு இருந்த போது, நான் இது வரை படித்ததிலேயே ஒரு அதி முக்கியமான கோப்பினை பார்க்க நேர்ந்தது. அது ARISE என்கிற ஒரு குழுவினைப்பற்றியது (Associates for Research Into Science for Enjoyment). இக்குழு இன்று மறக்கப்பட்டுவிட்டாலும் 1990 களில் உலகின் கருத்துகளை செறிவு செய்யக்கூடிய ஒரு மனித நல குழுவாக இருந்தது. முதலில் இக்குழுவின் கொள்கைகளை பற்றி சொல்லிவிடுகிறேன்.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org