இந்திய உழவர்களின் சிக்கல்களை நான்கு பெரும் பிரிவுகளாகப் பார்க்க முடியும். நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இந்திய உழவர்கள் பல நூற்றாண்டுகளாக விடாது உழைத்து வருபவர்கள்.மன்னராட்சிக் காலத்தில் இருந்து உழவர்களின் வருமானத்தை நம்பியே நமது அரசுகள் இயங்கி வந்துள்ளன. அதனால் தான் பண்டை இலக்கியப் பதிவுகளில் உழவர்களின் சிறப்பு பதிவாகியுள்ளது. பொதுவாக முதலாளித்துவ பொருளியல் மாற்றம் ஏற்பட்ட பிறகு வேளாண்மையில் பல திடீர் மாற்றங்கள் தோன்றின. முந்தைய நிலவுடமை அல்லது நிலக்கிழமை முறையில் உழைப்பு மலிவாக கிடைத்து வந்தது. அதன் விளைவாக உழவர்கள் தமது மரபுசார் தொழிலைவிட்டு வெளியேறத் தொடங்கினர். முற்றிலும் வேளாண்மையை மட்டும் நம்பி வாழும் உழவர்கள் நீண்ட காலமாக தொழில்நுட்ப முறையிலும், விதை, உரம் போன்ற இடுபொருள்கள் யாவற்றிலும் வெளியாட்களை நம்பியிராமல் தற்சார்பு உள்ளவர்களாக இருந்துள்ளார்கள். பசுமைப் புரட்சி எனப்படும் ரசாயண வேளாண்மை வந்த பின்னரும் உழவர்களின் தற்சார்பு சிதைவுற்றது எனலாம். ஆக உழவர்களின் முதல் சிக்கலாக அனைத்து நுட்பங்களுக்கும் இடுபொருள்களுக்கும் அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டிய தற்சார்பற்ற நிலை.
- 01. தலையங்கம்
- 02. உழவர்களின் சிக்கல்கள் - பாமயன்
- 03. உணவும் உரிமையும் - சரா
- 04. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் -சகி
- 05. மாடல்ல மற்றயவை - ஜெய்சங்கர்
- 06. அடிசில் பார்வை - அனந்து
- 07. இயக்கச் செய்திகள் - உழவன் பாலா
- 08. BRAI meet - அனந்து
- 09. செவிக்கு உணவு இல்லாத போது - Sri
- 10. மருந்து வாங்கப் போறீங்களா? - இ.க.இளம்பாரதி
- 11. புதிய புலவர்கள் - பாபுஜி
- 12. தற்சார்பு வாழ்வியல் - சாட்சி