தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கேழ்வரகு வெல்ல அடை - ஸ்ரீ

கேப்பை என்றும், ராகி என்றும், Red Millet என்றும் பெயர் பெற்ற கேழ்வரகு மிகுந்த கால்சியம் சத்தை உள்ளடக்கியது. உடல் கொழுப்பைக் கூட்டாமல் ஊட்டச்சத்தை மட்டும் கூட்ட வல்லது. இந்தக் கேழ்வரகில் இனிப்பு அடை செய்வது எப்படி என்று இந்த மாதம் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 1 கோப்பை

வெல்லம் (துருவியது) - 1/2 கோப்பை

ஏலக்காய்ப் பொடி - 2 சிட்டிகை

துருவிய தேங்காய் - தேவையான அளவு

தேங்காய் எண்ணை - 2 தேக்கரண்டி

நெய் - 25 கிராம்

உலர்ந்த திராட்சை - ஒரு கை நிறைய

செய்முறை

1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 3/4 கோப்பை நீரைக் கொதிக்க வைக்கவும். இதில் வெல்லத் துருவலைக் கலந்து நன்றாய்க் கரையும் வரை இளக்கவும்.

2. இறக்கி வடிகட்டி வைக்கவும்

3. சிறிதளவு நெய்யை ஒரு சிறு பாத்திரத்தில் காய்ச்சி, தேங்காய்த் துருவலையும், உலர் திராட்சையையும் நெய்யில் பொன்னிறமாக, நல்ல மணம் வரும் வரை, வதக்கவும்

4. வெல்லக்கரைசலை இதனுடன் கலந்து நன்றாகக் கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும்.

5. இதில் கேழ்வரகு மாவைக் கலந்து கட்டி தட்டாமல் தொடர்ந்து இளக்கவும்.

6. லேசான தீயில் 5 நிமிடம் இக்கலவையை வேக வைக்கவும்.

7. அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்

8. கை பொறுக்கும் அளவு சூடானதும் தேங்காய் எண்ணையைச் சிறிதளவு கலந்து நன்றாய்ப் பிசையவும்.

9. வாழை இலையில் சிறிது தேங்காய் எண்ணையோ நெய்யோ தடவி , இந்த மாவை உருண்டைகளாக்கிப் பின் அடைபோல் தட்டவும்.

10. தோசைக்கல்லிலோ, தாவாவிலோ (non-stick) இந்த அடையை இட்டு, இரு புறமும் பொன்னிறமாகும் வரை நெய்யில் பொரித்து எடுக்கவும்.

11. சூடு ஆறுமுன் பரிமாறவும்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org