குதிரைவாலி வெள்ளரி லஸ்ஸி
தேவையான பொருட்கள்
1. தயிர் - 1/2 கோப்பை
2. வெள்ளரி - 1/2
3. குதிரைவாலி அரிசி - 2 மேசைக்கரண்டி
4. நீர் - 1 1/2 கோப்பை
5. சீரகம் உடைத்தது - 1 தேக்கரண்டி
6. சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி
7. இஞ்சி - சிறிதளவு
8. உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
1. ஒரு கடாயில் 1/2 கோப்பை நீர் இட்டு அடுப்பில் வைக்கவும். அதில் குதிரைவாலி அரிசியைப் போட்டு மிதமான தீயில் அரிசி வேகும் வரை வைக்கவும். இதை இறக்கி ஆறவிடவும்.
2. வெள்ளரிக்காயைத் தோல் சீவி நறுக்கவும்.
3. சிற்றரவை இயந்திரத்தில் (mixie) வேகவைத்த அரிசி, வெள்ளரித்துண்டுகள், தயிர், உப்பு, இஞ்சி, சீரகப் பொடி அனைத்தையும் இட்டு அரைக்கவும்
4. இது கெட்டியாக இருக்கும். இதில் நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். தேவையானால் ஐஸ் கட்டிகளையும் இடலாம்.
5. வெள்ளரி லஸ்ஸி தயார். பரிமாறும் பொழுது உடைத்த சீரகத்தை மேலே தூவவும்
குறிப்பு
இஞ்சி விரும்பினால் அரைக்கும் போது சேர்த்துக் கொள்ளவும்
காரம் விரும்புபவர்கள் பரிமாறும்போது ஒரு சிறு சிட்டிகை மசாலாப் பொடியைத் தூவலாம்
குதிரைவாலி அரிசியைப் போல் வரகு, தினை, சாமை, பனிவரகு அரிசிகளையும் பயன்படுத்தலாம்.