தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சென்னையில் உணவுத் திருவிழா - அனந்து

பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு (safe food alliance) என்பது பல்வேறு உழவர் குழுமங்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள் என்று பலரும் சேர்ந்த, பாதுகாப்பான நஞ்சில்லா உணவு மற்றும் தற்சார்பு வாழ்வியலுக்கான, ஒர் கூட்டமைப்பு. இதன் மூலம் தமிழகமெங்கும் பல விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் உணவுத்திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அப்படி ஒன்று சூலை 5 அன்று சென்னை அண்ணா நகரில் டவர் பூங்காவில் அரங்கேற்றப்பட்டது. இம்முறை முதல், இது பாதுகாப்பான உணவுத்திருவிழாவாக மட்டும் இல்லாமல் தற்சார்பு வாழ்வியலை முன்னிறுத்தும் விழாவாக இருக்கும் என முன்பே அறிவித்தது போலவே நிகழ்வை வடிவமைத்திருந்தனர்.

மேலும் படிக்க...»

செவிக்கு உணவு இல்லாத போது

வரகு புலவு

வரகு அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் நெய், எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், (மேலுள்ள‌) அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தக்காளி, நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு கிளறி 2 கப் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீருடன் வரகு அரிசியைச் சேர்க்கவும். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் அணைத்துவிடவும். பின் ஒரு வானலியில் சிறிது பசு நெய் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்து இதனுடன் சேர்க்கவும். இறுதியில் நறுக்கிய ஆப்பிள், அன்னாசி, மாதுளையை சேர்த்து நன்று கிளறவும்.

மேலும் படிக்க...»

உண்ணும் சோறு, பருகும் நீரெல்லாம் நஞ்சு!

[கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.]

(பூச்சிக்கொல்லி நஞ்சுகளால் உலகின் சூழல், மேல்மண், நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், உயிர்ப்பன்மையம் என்று பற்பல தீவிளைவுகள் ஏற்பட்டு வருவது தெரிந்ததே. எனினும், வேளாண் வாணிப நிறுவனங்கள், இவை பரிந்துரைக்கப் பட்ட அளவில் பயன்படுத்தினால் ஏதும் தீமை விளைவிப்பதில்லை என்றும், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற (தம் வாணிபத்திற்கு வசதியான) நிலப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றன.

முழுக் கட்டுரை »

 

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org