தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

சுடலைக் குயில்:

தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ள நேரத்தில் நாம் காணும் பறவைகளில் சிறப்பான ஒன்று சுடலைக் குயில் என்கிற கொண்டைக் குயில். இதனை ஆங்கிலத்தில் Pied Crested Cuckoo என்றும் , Jacobin Cuckoo என்றும் அறிவியலில் Clamator jacobinus என்றும் அழைக்கின்றனர். மிகப் பண்டைக்காலம் முதல் இவற்றின் வருகை மழையின் அறிகுறியாகக் குறிக்கப் பட்டிருக்கிறது.

தோற்றம்:

மைனாவை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும். ஆண், பெண் இரண்டும் ஒரே நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி முழுவதும் வெள்ளாஇயாகவும், இறகுகள், தலை யாவும் அழகிய கருநிறத்திலும் , வால் கருப்பாகவும் நுனியில் வெண்மையாகவும், அழகிய கருநிறக் கொண்டையுடன் காணக் களிப்பூட்டும் அழகுடன் இருக்கும்.

மேலும் படிக்க...»

ஊனுடம்பு ஆலயம்

காற்றடைத்த பையடா! - நாச்சாள்

பிரபஞ்சத்தில் ஏற்படுகிற வாயுவின் அழுத்தம் சில நேரங்களில் புயல் என்னும் பெயரில் பெரும் சேதாரங்களை உண்டு செய்கிறது. அதைப் போல் குடலில் ஏற்படும் வாயுவானது மனிதனைச் சில நேரங்களில் ஏப்பம், அபான வாயு எனவும் திக்கு முக்காடச் செய்து விடுகிறது. ஆங்கிலத்தில் Flatulence; தமிழில் அபான வாயு - உடலில் பல நுண்ணுயிர்கள் , உணவை ஜீரணித்து வெளியேற்றப் பேருதவியாக இருக்கின்றன‌. உணவைப் பிரித்து நொதித்து சீரான ஜீரண சக்தியைக் கொடுக்க இவை உதவுகின்றன‌. இந்த நுண்ணுயிர்கள் உணவை ஜீரணிக்கும் போது சில வாயுக்கள் வெளியேறும்.

மேலும் படிக்க...»

உண்ணும் கலையும், கலையில்லா உணவும் - ராம்

தற்சார்பு வாழ்வியல் என்பது மூன்று நலன்களை நோக்கிப் பயணிப்பது - உடல் நலம், மன வள‌ம், மண் நலம். இதில் ஒன்று குறையினும் மற்ற இரண்டும் சிதிலமடையும். இயற்கை உணவு, உடற்பயிற்சி போன்றவை உடல்நலத்தைப் பேணினாலும், உடலின் மறுபக்கமாக உள்ள மனத்தைப் பேணக் கலைகள் மிக இன்றியமையாதவை. இலங்கைத் தமிழரான ஆனந்த குமாரசுவாமி 1877 முதல் 1947 வரை வாழ்ந்த ஒரு தலைசிறந்த சிந்தனையாளர்; கலை ரசிகர், எழுத்தாளர். சமூகத்தில் கலைகளின் தேவையை, மனவளத்திற்கு அவை ஆற்றும் பணியை மிக ஆழமாகவும், துல்லியமாகவும் விரிவுரைத்தவர். இவரைப் பற்றித் தாளாண்மையில் பின்னர் காண்போம் - ஆசிரியர் ) ாம்

மேலும் படிக்க...»

 

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org