தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது


வரகு புலவு

தேவையான பொருட்கள்
 1. வரகு அரிசி - 2 கப் காரட், பீன்ஸ், பட்டாணி - 3 கப்
 2. சின்ன‌ வெங்காயம் -1 கப்,
 3. தக்காளி - 1 கப்
 4. எலுமிச்சை - 1
 5. பட்டாணி - 1/2 கப்
 6. தேங்காய்ப்பால் - 1/2 கப்
 7. சிறிதளவு - காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், நறுக்கிய அன்னாசி பழம், ஆப்பிள், மாதுளை (விருப்பம்போல்)
அரைக்க
 • பச்சை மிளகாய் - 5
 • தனியா - ஒரு டீஸ்பூன்
 • இஞ்சி - ஒரு துண்டு
 • பூண்டு - 6-8 பல்
 • கசகசா - ஒரு- டீஸ்பூன்
 • முந்திரி - 6
 • பட்டை - 1
 • லவங்கம் - 1
 • ஏலக்காய் - 1
 • புதினா - ஒரு கட்டு
 • மல்லித்தழை - அரை கட்டு
தாளிக்க
 • பிரிஞ்சி இலை - 2
 • பசு நெய் - 3 டேபிள்ஸ்பூன்
 • செக்கு கடலை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை

வரகு அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் நெய், எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், (மேலுள்ள‌) அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தக்காளி, நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு கிளறி 2 கப் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீருடன் வரகு அரிசியைச் சேர்க்கவும். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் அணைத்துவிடவும். பின் ஒரு வானலியில் சிறிது பசு நெய் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்து இதனுடன் சேர்க்கவும். இறுதியில் நறுக்கிய ஆப்பிள், அன்னாசி, மாதுளையை சேர்த்து நன்று கிளறவும்.

குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாக எடுத்து செல்ல ஏற்றது. சத்துமிகு தானியமான வரகுடன் காய்கறி, பழங்கள் மற்றும் முந்திரி பாதாம் சேர்த்து குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org