தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தாளாண்மைச் சங்கம் - அழைப்பிதழ்


சங்கம் வளர்த்த தமிழ்நாட்டில் இப்போது நற்சங்கங்களின் தேவை மிகவும் அதிகமாகி விட்டது. மனித நலம் என்பது உடல், மனம் மற்றும் புவி என்ற மூன்று நலன்களையும் சார்ந்தது; பணப்பெருக்கம் மட்டுமே வளர்ச்சி என்று அனைவரும் பொருள் தேடும் இறுக்கமான சமூகச் சூழலில் இம்மூன்று நலன்களும் சீரழிகின்றன. துணிவுடன் ஒரு மாற்றுப் பாதையைத் தேடத் தன்னால் இயன்ற அளவு தாளாண்மை முயன்று வருகிறது. தாளாண்மையின் வாசகர்கள், எண்ணிக்கையில் குறைவாயினும், ஒவ்வொருவரும் தங்கள் அளவில் ஒரு கைவிளக்காய்த் திகழ்பவர்கள். பொருளாசையால் விளைந்த சுயநலம் என்னும் பாலைவனத்தில், ஆங்காங்கே எஞ்சியிருக்கும் பகிர்ந்து உண்ணும் சோலையாய் இருப்பவர்கள். நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு சங்கம் அமைப்பது இச்சோலைகளை இணைக்கும் ஒரு முயற்சியாகும். சங்கம் என்றால் அது பண்டைத் தமிழில் பொருள்படுவது போல் “ஒரு கூடுதல், ஒரு அமர்வு, ஒரு பகிர்தல்”. இயக்க அமைப்போ செயல் திட்டங்களோ அல்ல. கொண்டு வருவதும், பகிர்ந்து கொள்வதும், எடுத்துச் செல்வதும் எண்ணங்களையும், சிந்தனைகளையும் மட்டுமே.

தாளாண்மைச் சங்கம் ஆகஸ்ட் 23ம் தேதி திண்டுக்கல் காந்திகிராமில் மதிய‌ம் 2 மணிக்குத் திட்டமிடப் பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 24ம் தேதி நம் தற்சார்பு இயக்கத்தின் ஆசான் திரு. ஜே.சி.குமரப்பா அவர்களை நினைவு கூறும் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இது நம் வீட்டு விழாவாக இருப்பதால் யாருக்கும் அழைப்புத் தேவையில்லை. செய்தி மட்டுமே போதும். எனினும் மரபைக் கருதி அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உங்கள் வருகையைப் பதிவு செய்ய‌

அனந்து - 9444166779 மற்றும் ராம் - 9444957781 என்ற அலைபேசிகளில் தொடர்பு கொள்ளவும்; அல்லது info@kaani.org என்ற மின்னஞ்சலில் செய்தி மடல் அனுப்பவும்.

நாள் : 23 ஆகஸ்ட் 2014 , பிற்பகல் 2:00 மணி

இடம்: காந்திகிராமம், திண்டுக்கல்

நிகழ்வு: தாளாண்மைச்சங்கம்

நாள் : 24 ஆகஸ்ட் 2014 , முற்பகல் 10:00 மணி

இடம்: காந்திகிராமம், திண்டுக்கல்

நிகழ்வு: குமரப்பாவிடம் கேட்போம்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org