தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

சுடலைக் குயில்

தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ள நேரத்தில் நாம் காணும் பறவைகளில் சிறப்பான ஒன்று சுடலைக் குயில் என்கிற கொண்டைக் குயில். இதனை ஆங்கிலத்தில் Pied Crested Cuckoo என்றும் , Jacobin Cuckoo என்றும் அறிவியலில் Clamator jacobinus என்றும் அழைக்கின்றனர். மிகப் பண்டைக்காலம் முதல் இவற்றின் வருகை மழையின் அறிகுறியாகக் குறிக்கப் பட்டிருக்கிறது.

தோற்றம்:

மைனாவை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும். ஆண், பெண் இரண்டும் ஒரே நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி முழுவதும் வெள்ளாஇயாகவும், இறகுகள், தலை யாவும் அழகிய கருநிறத்திலும் , வால் கருப்பாகவும் நுனியில் வெண்மையாகவும், அழகிய கருநிறக் கொண்டையுடன் காணக் களிப்பூட்டும் அழகுடன் இருக்கும்.

காணும் இடம்

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் வயல்வெளி, ஆற்றங்கரை, வாய்க்கால் கரைகளில் இவற்றைக் காணலாம். பருவ மழைக்கு ஏற்ப இவை இடம் மாறிக்கொண்டே இருக்கும்.

உணவு

புழு, பூச்சிகள், வெட்டுக்கிளி, சிறிய பழங்கள் இவற்றை உண்ணும். சர்க்கரைப் பழ மரங்களில் இவற்றை அதிகம் காணலாம்.

இனப்பெருக்கம்

ஆடி முதல் புரட்டாசி வரை. பெண்குயில் தன் முட்டையைக் கொண்டைக் குருவி அல்லது தவிட்டுக் குருவிக் கூட்டில் இடும். ஆண் குயில் குருவிகளை திசை திருப்பும்போது பெண் குயில், குருவிகளின் கூட்டிலுள்ள முட்டைகளைத் தள்ளி விட்டுத் தன் முட்டைகளை இடும்!

சிறப்புச் செய்திகள்

  • வேறு எந்த நீரையும் குடிக்காது மழை நீரை மட்டுமே குடிப்பவை. தாகம் வரும்போது வானத்தைப் பார்த்துப் பாடுவதாகவும் அப்போது வானமே இரங்கி மழை அனுப்புவதாகவும் கவிஞர்கள் பாடியுள்ளனர்.
  • இதிகாசங்களில் இதை சாதகப் பறவை என்றும் சலனங்களைக் கடந்து மேல்நோக்கி மட்டுமே போகும் வைராக்கியப் பறவை என்றும் கூறியுள்ளனர்.
  • காளிதாசன் தன் மேகதூதத்தில் இதைப் பற்றிப் பாடியுள்ளார்.
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org