தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மீளாத் துயரில் கற்றது என்ன? - அனந்து

உங்களில் பலருக்கும் மறந்திருக்கும். பீஹாரில் சரன் மாவட்டத்தில் அன்று 23 குழந்தைகள், பள்ளியில் கொடுக்கப்பட்ட மதிய உணவில் பூச்சிக்கொல்லி நஞ்சு கலந்து விட்டதனால் உயிர் இழந்தனர். நமது நாட்டில் பெரும்பாலான பேரிடர்கள் நெடுநாட்கள் மக்கள் மனதிலும் அரசாங்கத்தின் நினைவிலும் இருப்பதில்லை. அடுத்த இடரோ பிரச்சினையோ அந்த இடத்தை நிரப்பிவிடுகிறது. அந்தத் துயர சம்பவம் அப்பொழுது உலகையே துயரத்தில் ஆழ்த்தியது. எல்லா மக்களையும் உலுக்கியது. அரசாங்கத்தின் ஒரு மைய திட்டத்தின் கீழ் இப்படிப் பல உயிர்கள் அதுவும் சிறு குழந்த்தைகளின் உயிர் பரிபோனது ஒரு பெரும் வெட்கக்கேடான விஷயம். இன்றளவும் என்ன செய்திருக்கிறோம் என்றால்- ஒன்றும் இல்லை! அன்று மோனோக்ரோடொபாஸ் என்னும் கொடிய விஷ பூச்சிக்கொல்லி கலந்ததினால் உயிர் இழப்பு ஏற்பட்டது. இதனை வெறும் ஒரு முறை நடந்த விபத்தாக பார்க்க முடியாது. இன்னமும் பல இடங்களில், பள்ளிகளில் இந்த ஆபத்து வெடிக்கக்கூடும். அன்றாடம் பல வழிகளிலும் இந்த மோனோக்ரோடொபாஸ் போல பல கொடிய விஷங்கள் நம் உணவில் கலந்த வண்ணம் உள்ளது.

இந்திய அரசாங்கமும் மற்ற மாநில அரசாங்கங்களும் குறிப்பாக பீஹார் அரசாங்கமும் என்ன பாடம் கற்றன? அப்படி என்ன பாடாம் கற்றன, கற்றார்களா இல்லையா போன்ற கேள்விகளுக்கு விடை காணும் விதமாகவும், எப்படி இதை போன்ற ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என்று அராய்வதற்கு, “இந்தியாவின் பாதுகாப்பான உணவு” (India For Safe Food) என்னும் ஆஷாவின் ஒரு அங்கம் , ” சாவைப் பரிமாறுவதா?- இந்தியக் குழந்தைகளுக்கான பாதுகாப்பான உணவிற்கான அறைகூவல்” என்ற பெயரில் ஒரு சீரிய ஆய்வறிக்கையை வெளியிட்டது-. இந்த ஆய்வறிக்கை நம் எல்லோருக்கும் நம் உணவு/காய்கறிகள் மூலம் உள்வாங்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற வேதிப்பொருட்களால் ஏற்படக்கூடிய தொல்லைகளையும் அவற்றின் பக்க (தீவிர) விளைவுகளையும் தெளிவாக விளக்குகிறது. குறிப்பாக குழந்தைகள் மேல் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துரைத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய முடியும்/வேண்டும் என்றும் விவாதிக்கிறது.

பல சீரிய ரசாயனங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் தடை செய்யக்கோரிய ஐக்கிய நாடுகளின் FAO அறிக்கை பற்றியும் குறிப்பிடுகிறது. தடுக்ககூடிய, தடுக்க வேண்டிய இந்த கொடிய நச்சுப் பூச்சிகொல்லிகளையெல்லாம் பற்றி இந்த தேசத்திற்கு நினைவூட்டுகிறது! அதே நேரத்தில் இந்த விஷங்களற்ற இயற்கை முறையில் எந்த ரசாயனமும் இல்லாத உணவைக் குழந்தைகள், ஏழைகளுக்கு எப்படி எடுத்து செல்வது என்று ஆராயும் ஒரு அறிக்கை. இதனை வெளியிடும் பொழுது ஆஷாவின் கவிதா குருகன்டி, ” இப்படி ஒரு கூட்டமாக பலரது உணவில் நஞ்சு கலப்பது முதல் முறை அல்ல. பலவும் நடந்து கண்டு கொள்ளப்படாமல் போயிருக்கின்றன.அரசாங்கம் பூச்சிக்கொல்லி மேலாண் சட்டத்தினை கொண்டு வர வேண்டும், மக்கள் மற்றும் சுற்றுசூழலின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தினைக் காத்திட வேண்டும்” என்றார்.

<“இந்தியாவின் பாதுகாப்பான உணவின்” ரசனா அரோரா - நமது அடுத்த தலைமுறையின் விதியை நாம் இப்படி நம் அக்கறையின்மையாலும் செயலின்மையாலும் அழிப்பது மிகவும் வருந்தத்தக்கது. அரசாங்கத்தின் பல்வேறு நல திட்டங்களிலும் ரசாயன கலப்பற்ற நல் உணவினையே கொடுக்க திட்டமிட வேண்டும் என்றும் பொதுவாகவே நம் அனைவரது உணவினின்றும் இந்த நச்சுக்களை அகற்ற ஆவன செய்யவேண்டும் என்றும் கூறினார்.

குழந்தைகள் எப்படி இந்த கொடிய பூச்சிக்கொல்லிகளால் பாதிப்பு அடைகின்றனர் என்று தெளிவாகக்கூறும் இந்த அறிக்கையில் உள்ளதை ஆமோதிக்கும் டாக்டர் சிங் “உலக அளவில் சிறு குழந்தைகள் இவ்விசங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று பல நிரூபண‌ங்கள் உள்ளன. இந்க்த கொடிய பூச்சிக்கொல்லிகளால் பல பிறந்த குழந்தைகளே பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது” என்றார்.

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org