தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நிரம்பிய நூல் - பாபுஜி

சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு என்ற நூலை அண்மையில் வாசித்தேன். ஒரு நதி மறையுமா? எவ்வாறு அது சாத்தியம்? அது ஒரு திடீர் நிகழ்வா அல்லது தொடர்ந்த ஒன்றா? என்ற கேள்விகளாலும், வேதங்களில் மிக உயர்த்தி சொல்லப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியின் மறைவைப்பற்றியது என்பதாலும் நான் அந்நூல் நோக்கி ஈர்க்கப்பட்டேன் என்பதே உண்மை. மிஷல் தநினோ என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ஒருவரின் கடும் முயற்சியால் விளைந்த நூல் இது. இந்நூல் எவ்வாறு சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரிகம் என்பதையும் அது எவ்வாறு ஹரப்பாவிலுருந்து மேற்கே குஜராதின் கட்ச் வளைகுடா (Rann of Kutch) என்பதையும் பின்னானில் எவ்வாறு அது கங்கை சமவெளியை நோக்கி நகர்ந்தது என்பதையும் ஏராளமான வரைபடங்களுடனும் வரலாற்று சான்றுகளுடனும் தெளிவாக விளக்குகிறது. வியப்பூட்டும் வகையில் நம் மரபு சார்ந்த விவசாயம் எவ்வாறு 5000 ஆண்டு தொடர்புடையது என்பதையும் இந்தியாவில் இன்றும் வழக்கில் உள்ள வாழ்வியல் முறைகள் எவ்வாறு சரஸ்வதி நதி சார்ந்த நாகரிகத்தின் தொடர்ச்சியே என்பதையும் தெளிவாக்குகிறது. ஆரிய படையெடுப்பு என்பதே ஒரு மாயை என்பதும் அது மேலை நாட் டு ஆராய்ச்சியாளர்களின் 'கண்டுபிடிப்பு' என்பதையும் தெள்ளதெளிவாக விளக்குகிறது. இன்று கூட ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் 40/50 அடி ஆழம் தோண்டினால் நன்னீர் கிடைப்பது புதையுண்ட சரஸ்வதி நதியில் இருந்துதானாம்!

முழுக் கட்டுரை »

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்.

அந்நியனே வெளியேறு - அன்று, ஆகஸ்டு 9, 1942! அன்று எப்படி வியாபரம் மட்டுமே ஆயுதமாக கொண்டு நம்மை அடிமை கொண்டானோ, இன்றும் அதே வியாபாரம் மூலமாக நம்மை நம் உணவை, நம் விதையை, உரிமைகளைப் பறித்து, அடிமைப் படுத்த துடிக்கின்றன, மொன்சன்டொ முதலான மேற்கத்திய/ அமெரிக்க பெரும் பகாசுரக் கம்பனிகள். நம் விவசாயிகளின் வாழ்வாதாரம், விதை உரிமை மற்றும் பொருளாதாரம் எல்லாம் பறிபோகும் நிலை, ஒரு நிதர்சனமாய்க் கண்முன் விசுவரூபம் எடுக்கிறது. அதற்குத் துணை போக நம் அரசியல்வியாதிகள்/அடிமைகள்- வியாபரம் மற்றும் மேம்படுத்துதல் என்ற போர்வையில் இத்தனை கூத்துக்கள். அது மட்டுமல்ல, நாம் முன்பே பல முறை தாளாண்மையில் எழுதியது போல், பிராய் ( BRAI) என்னும் உயிரி தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய சட்டம், இந்த பகாசுரக்கம்பனிகளுக்கு உதவ வேண்டி வருகிறது.

மேலும் படிக்க...»

 

அடிசில் பார்வை - அனந்து

சென்ற மாத‌ம் எண்ணையை பற்றிப் பார்த்தோம். செக்குகள் எப்படி அழிக்கப்பட்டன என்றும் இன்றைய ரீஃபைன்டு மோகத்தின் ஆணி வேரையும் அதன் கேடுகளையும் படித்தோம். அதில் கலப்படம் என்பது லேபிலிங் சட்டத்தின் மூலம் எப்படி இயந்திரமய உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தையே மேம்படுத்துவதாக உள்ளது என்பதையும் பார்த்தோம். /a>ப்லென்டிங் (blending) என்ற பெயரில் பாம் ஆயிலும், பருத்தி கொட்டை எண்ணயுமே மிகவும் அதிகமாக நம்மை வந்தடைகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கச்சா எண்ணையை அடுத்துப் பனை எண்ணையே மிக அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது! சென்ற ஆண்டின் (20012-13) மொத்த பனை எண்ணை இறக்குமதி 87 லட்சம் டன்கள் என்கிறது ஒரு அரசாங்க ஆவணம். 80களில் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் டன்கள் வரை இருந்த இறக்குமதி 90களில் 13 முதல் 20 லட்ச‌ங்களுக்கு சென்றது. பனை எண்ணையை மிகவும் அதிகமாக உபயோகிக்கும் கம்பனி பெப்ஸிகோ ஆகும்! எதற்கு? எல்லாம் நாம் ரசித்து ருசிக்கும் லேஸ்,குர்குரே போன்ற பொரித்த உணவுகளுக்குத்தான்!

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org