தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

போகாறு அகன்ற கதை!

திடீரென்று நம் நாட்டின் நாணயமான ரூபாய் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 1985ல் ஒரு அமெரிக்க டாலர் 12 ரூபாய்களுக்குச் சமமாக இருந்தது. 1991ல் ஏற்பட்ட கடுமையான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையின் போது அது 17.90 ஆனது. 1993ல் சீர்திருத்தம் என்ற பெயரில் நம் சந்தை அந்நிய முதலீட்டிற்குத் திறந்து விடப்பட்டபோது 1 டாலர் - 31.37 ரூபாய் ஆனது. பின் 2000-2010 வரை 40 முதல் 50 ரூபாய் என்ற அளவில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. கடந்த 2 வருடங்களில் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து இக்கட்டுரை அச்சேறும் போது 63 ரூபாயைத் தாண்டி விட்டது ஒரு டாலரின் மதிப்பு. ஆனால் இது திடீரென்று ஏற்பட்டதல்ல. GDP என்று சொல்லப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமானால் அது பொருளாதார வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. ஏற்றுமதியை அதிகரிக்கிறோம் அதனால் பொருளாதாரம் வளரும்; அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம் அதனால் உள்நாட்டு உற்பத்தி கூடும், வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்பது நம் அரசின் பொருளாதாரக் கொள்கையாய் இருக்கிறது. ஆனால் உண்மை என்ன?
முழுக் கட்டுரை »

ஏசுநாதரும் தற்சார்பும்

நிறைவு அடைவதும் என்று கடந்த கட்டுரைகளில் கண்டோம். முழு நிறைவுக்கு எடுத்துக் காட்டாய்ச் சீன ஞானி லாவோ ட்சேவின் கவிதை ஒன்றையும் கண்டோம். புறத் தற்சார்பு என்பது சூழல் சுவட்டைக் குறைக்கும் எளிமையான வாழ்முறையால் அமையினும், அகத் தற்சார்பு என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்ப்பொருள் காணும் தன்னாட்சியில்தான் அமையும் என்றும் கண்டோம். தற்சார்பு அடையத் தேவை, போதும் என்ற மனமே என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம். ஆனால் இன்னொரு முக்கியமான அங்கத்தையும் நாம் இங்கு ஆராய வேண்டும். உலகில் 95% பேர் கடவுள் என்று ஒரு சக்தி இருப்பதாக நம்புகின்றனர். அவரவர் பிறப்பின்படியோ, பின் ஏற்பட்ட விருப்பின்படியோ கடவுளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறோம். எனவே தற்சார்பு வாழ்வியல் என்ற கோட்பாடு, ஒவ்வொரு மதத்தாலும் ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதா என்று நாம் ஆராய வேண்டும்.

மேலும் படிக்க... »

 

குமரப்பாவிடம் கேட்போம்

கடந்த முப்பது வருடங்களாக காந்திஜி கதரைப் போதித்து வருகிறார். நம் தேசப் பணியாளார்களில் பலர் இதன் விளைவாகக் கையால் நூற்றுக் கையால் நெசவு செய்த துணிகளை அணிந்து வருகிறார்கள். ஆனால் அதில் வெகு சிலரே இச்சின்னத்தின் முழுப் பரிணாமங்களை அறிகிறார்கள். பண்டித நேரு ஒரு மேடைப் பேச்சின் போது கதரை “விடுதலையின் ஆடை” என்று வருணித்தார். வேறு பலர் கதர் அணிவது ஒரு ஒழுக்கத்தின் சின்னம் என்று கருதுகிறார்கள். ஆனால் கதர் என்பது ஒரு வாழ்முறை என்று எத்தனை பேர் உணருகிறார்கள்? நம் சக மனிதனுடனான் நம் உறவு அகிம்சைக்கும், சத்தியத்திற்கும் உட்பட்டு இருக்க கதர் உறுதுணையாகிறது என்றும், இதுதான் கதர் அணிவதன் அடிப்படைக் கோட்பாடு என்றும் எத்தனை பேர் தெரிந்திருக்கிறோம்?

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org